Advertisment

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிபின்பு கதாநாயகியாக மாறி தமிழில் தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமானார். ஹன்சிகா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="24261f39-e76f-416f-8aa7-9f7972fa34e5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_11.jpg" />

இந்நிலையில் ஹன்சிகா, தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் கடந்த 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் கோலாகலமாக பிரம்மாண்டத்துடன் நடைபெற்றுள்ளது. இந்த புது தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.